Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜூன் 07 , பி.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (08) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.
அதற்கென நாடாளுமன்றம் இன்று புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்வோம் என்று பிரேரணையை சமர்ப்பித்துள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சூளுரைத்துள்ளது. இதேவேளை, நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்வோம் என்று ஆளுங்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகங்கொடுப்பது தொடர்பில், ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை இரவு விசேட கூட்டமொன்று நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் ஆளும் கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அக்கூட்டத்தின் போது நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, வாக்கெடுப்பு நிறைவடையும் வரையில் நாடாளுமன்றிலேயே இருக்க வேண்டும். சபைக்கு இன்று (08) கட்டாயம் சமுகளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று ஜே.வி.பி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (07) கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இன்று புதன்கிழமை (08) காலை கூடி ஆராய்ந்து முடிவெடுக்கவுள்ளது.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பிக்களில் 34 பேர் கைச்சாத்திட்டுள்ளனர். இந்த எதிரணியில் முக்கியஸ்தர்கள் என்று கூறப்படும் முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, எம்.பியான நாமல் ராஜபக்ஷ மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் கையொப்பமிவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தவிர எதிரணியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மையின பிரதிநிதிகள் எவருமே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடவில்லை.
குற்றச்சாட்டுகள்
- 2016 வரவு-செலவுத் திட்ட அறிக்கையை நிறைவேற்றுகையில் நிதியமைச்சர் தவறான வெளிக்காட்டல் மூலம் நாடாளுமன்றத்தையும் பொதுமக்களையும் தவறான வழியில் இட்டுச் சென்று, குறித்த வரவு-செலவுத்திட்ட அறிக்கையினை வெறுமனே பொருளற்ற ஒரு பிதற்றலாக ஆக்கியுள்ளதனாலும்,
- முழு மொத்தப் பொருளாதாரத்தையும் அழிவுப் பாதையில் இட்டுச் சென்று பிடிவாதமான நெகிழ்வுத் தன்மையற்ற தான்தோன்றித்தனமான அரச நிதி முகாமைத்துவ கொள்கையினை கடைப்பிடித்தல்.
- நாட்டுக்குச் சொந்தமான உத்தியோகப்பூ;வ வெளிநாட்டு ஒதுக்குகள் பாரியளவில் வீழ்ச்சியடைவதனால் பொருளாதார அளவுக்கதிகமாக நெருக்கடிக்குள்ளாகியது.
- இலங்கையினால் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான இயலுமைய தொடர்பில் நாட்டை ஆபத்த்hன நிலைமைக்கு ஆளாக்கியுள்ளமை.
- வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்நாட்டு வங்கிகளில் டொலர் 1.2 பில்லியனை வைப்பிலிட்டுள்ளனர் எனும் நிதி அமைச்சரின் கூற்று உலகம் பூராகவும் விளம்பரப்படுத்தப்பட்ட போதிலும் பாரியளவில் செலாவணி வங்கிகளுக்கு உட்பாச்சப்படவில்லை என நிதி மற்றும் வங்கிச் சந்தைகள் குறிப்பிட்டமை
ஆகிய குற்றச்சாட்டுகளே முன்வைக்கப்பட்டுள்ளன.
18 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
43 minute ago
2 hours ago