Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஓகஸ்ட் 27 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நள்ளிரவில் புதுமண தம்பதி தாம்பத்யத்தில் ஈடுபட்டிருந்த போது, ஜன்னல் வழியாக அதனை வீடியோ எடுத்த வாலிபரால் அடுத்தடுத்து நடந்த பரபரப்பான சம்பவம் சிவகங்கையில் இடம்பெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் வசித்து வந்த வீட்டின் எதிர் வீட்டில் கோகுல் சந்தோஷ் என்பவர் வசித்து வந்தார்.
இந்தநிலையில் புதுமண தம்பதி இருவரும் நள்ளிரவில் தாம்பத்ய உறவில் ஈடுபட்டிருந்த போது, திறந்திருந்த ஜன்னல் கதவு வழியாக எதிர்வீட்டில் வசிக்கும் கோகுல் சந்தோஷ், தனது வீட்டு மாடியில் இருந்து, அலைபேசி மூலம் தாம்பத்ய உறவில் ஈடுபட்டிருந்த தம்பதியரை வீடியோ படம் பிடித்துள்ளார்.
அந்த வீடியோவை சித்த மருத்துவர் ஹரிஹரசுதன் என்பவரிடம் சந்தோஷ் காண்பித்துள்ளார். இருவரும் கண்டு ரசித்த நிலையில், சித்த மருத்துவர் ஹரிகரசுதன் கோகுல் சந்தோசிடம் இந்த ஆபாச வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்று அந்த பெண்ணை மிரட்டி பணம் பறித்து அந்த பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்கலாம் என்ற யோசனையை கூறியுள்ளார்.
இந்த திட்டத்திற்கு ஏற்ப இரு கூட்டாளிகளை தங்களுடன் சேர்த்துக் கொண்டு மிரட்டல் படலத்தை ஆரம்பித்துள்ளனர். இளம்பெண்ணை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, பொலிஸ் என கூறி பேசியுள்ளனர். அப்போது, “உன்னுடைய ஆபாச வீடியோ வெளியாகியுள்ளது அதுகுறித்து பொலிஸாருக்கு புகார் வந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க தாங்கள் குறிப்பிடும் இடத்திற்கு வரவேண்டும்” என்று கூறி மிரட்டியுள்ளனர்.
உடனே அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு அந்த பெண் சென்றிருக்கிறார். அந்த பெண்ணை சொகுசு காரில் அழைத்துச் சென்று கணவன், மனைவி இருவரும் தாம்பத்யத்தில் ஈடுபட்டிருந்த வீடியோவைக் காட்டி மிரட்டியுள்ளனர். அதைக் கண்டு கதறிய புதுமணப் பெண் “வீடியோவை டெலிட் செய்யுங்கள்” என்று கதறி அழுதுள்ளார்.
இதை தொடர்ந்து அந்த வக்கிர கும்பல் வீடியோ இணையத்தில் வெளியிடாமல் இருக்கவேண்டுமானால், 3 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் அதுமட்டுமின்றி தங்களுடன் உல்லாசமாக இருக்கவேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளனர். பணம் எதுவும் தன்னிடம் இல்லை என்று கூறிய அந்த பெண்ணிடம் அவர் அணிந்திருந்த நகைகளை கேட்டு மிரட்டியுள்ளனர்.
மேலும் தான் அணிந்துள்ள நகைகள் கவரிங் என்று கூறியவுடன் இறுதியாக ஒரு சிறிய தொகையாவது கொடுத்தால் தான் நீ தப்பமுடியும் என்று கூறியுள்ளனர். தன்னிடம் தற்போது பணம் எதுவும் இல்லை என்று கூறி தப்பி வந்த அந்த பெண், அனைத்து சம்பவங்களையும் கணவரிடம் சொல்லி கதறியிருக்கிறார்.
கணவன், மனைவி இருவரும் காவல் துறையில் புகார் செய்ய முடிவெடுத்து, கணவர் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், உடனடியாக, களத்தில் இறங்கிய பொலிஸார், சித்த மருத்துவர் ஹரிஹரசுதன், மறைந்திருந்து வீடியோ எடுத்த கோகுல் சந்தோஷ் கூட்டாளி முத்துப்பாண்டி மற்றும் 17 வயது சிறுவன் ஒருவன் என 4 பேரை பொலிஸார் அதிரடியாக கைது செய்தனர்.
விசாரணையில், இவர்கள் வாயிலாக, புதுமண தம்பதியரின் வீடியோ வாட்ஸ்அப் குரூப்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த வக்கிர கும்பல் பயன்படுத்திய அலைபேசிகளை பறிமுதல் செய்த பொலிஸார் சைபர் கிரைம் பொலிஸாருக்கு அனுப்பி ஆய்வு செய்து வருகின்றனர்.
14 minute ago
34 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
34 minute ago
53 minute ago
1 hours ago