2025 ஜூலை 05, சனிக்கிழமை

'நாங்கள் கட்டணங்களை குறைக்க மாட்டோம்’

Editorial   / 2019 டிசெம்பர் 25 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து ஓட்டோக்களுக்கான பயணக்கட்டணத்தை குறைப்பதற்கு தாம் தயாராக இல்லையென அகில இலங்கை ஓட்டோ உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி எரிபொருள் மானியம் பெற்று அதன்  பயனை பயணிகளுக்கு வழங்கவே தாம் எதிர்பார்த்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து ஓட்டோக்களுக்கான பயணக்கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சுய தொழில் தேசிய முச்சகரவண்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், அகில இலங்கை ஓட்டோ உரிமையாளர்கள் சங்கமும் கட்டணத்தை குறைக்குமா என்பது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் சுதில் ஜயருக் இதனைக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .