2025 ஜூலை 10, வியாழக்கிழமை

நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு

Editorial   / 2020 மார்ச் 08 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில், தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமானது, 25 மாவட்டங்களை  உள்ளடக்கியவாறு  முன்னெடுக்கப்படவுள்ளது. 

இம்மாதம் 11 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை  அனைத்துப் பிரதேசங்களிலும் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.    

பொலிஸார், கடற்படையினரின்  ஒத்துழைப்புடன் இந்தச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக,  தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். 

மழைக் காலங்களில் டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மார்ச் 11 ஆம்  திகதியிலிருந்து ஒரு வாரத்துக்கு, டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்  முன்னெடுக்கவுள்ளதாக,  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .