Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 28 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் மதிய உணவுக்கு 296 ரூபாயே செலவிடப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு நாடாளுமன்றில் வழங்கப்படும் மதிய உணவுக்காக 3 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுவதாகவும், எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து வெறும் 200 ரூபாய் பணமே அறவிடப்படுவதாகவும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதுத் தொடர்பில் இன்றும் (28) நாடாளுமன்றத்தில் ஆளுங், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியதோடு, இதுத் தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு நாடாளுமன்ற மதிய உணவுக்காக வெறும் 296 ரூபாய் செலவிடப்படுகிறது. எனினும் நாடாளுமன்றத்தில் உணவுக்காக செலவிடப்படும் மொத்தப் செலவையும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 225 பேருக்கு கணக்குக் காண்பிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
28 minute ago