2025 ஜூலை 03, வியாழக்கிழமை

’நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கப்படவேண்டும்’

Editorial   / 2019 பெப்ரவரி 23 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

போதைப்பொருள் பயன்படுத்துபவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கப்படவேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, அமைச்சர்கள் சிலரும் போதைப்பொருள் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ள நிலையில், அது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

அமைச்சர்கள் யாராவது போதைப்பொருள் பயன்படுத்துவது ஆதரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், அவர்களை அமைச்சுப் பதவியிலிருந்து மட்டுமல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும் என்றும் கடந்த கால ஆட்சியாளர்களால், போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

நாட்டின்அரசியல்வாதிகளே, போதைப்பொருள் பாவனையாளர்களாக காணப்பட்டால் நாட்டின் எதிர்கால நிலைமை என்னவென்பது கேள்விக்குறியாகிவிடும் என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .