Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 27 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் தேசிய பாதுகாப்பு பலவீனமடைந்துள்ளதுடன், அரச தலைவர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஆகியவைத் தொடர்பில் விசேட விவாதம் ஒன்றை நடத்துவதற்கு, அடுத்தவாரம் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு தெரிவித்து, ஒன்றிணைந்த எதிரணி நேற்று சபாநாயகர் கருஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் பாரிய பொருளாதார பிரச்சினை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், இரண்டு வாரங்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளை நடத்தாமை பாரிய பிரச்சினைகளை உருவாக்கும் எனத் தெரிவித்து, இந்தக் கோரிக்கையை சபாநாயகரிடம் முன்வைத்ததாக, ஒன்றிணைந்த எதிரணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொலிஸ்மா அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவது குறித்து, ஒன்றிணந்த எதிரணி கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதாகவும், நாடாளுமன்றத்தை கூட்டி ஏனைய அரசியல்கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago