2025 ஜூலை 12, சனிக்கிழமை

‘நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டிய அவசியமில்லை’

Editorial   / 2018 நவம்பர் 08 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவையேற்படின் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாக, நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு, அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு எனத் தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த    ராஜபக்‌ஷ , அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இருப்பதனால், அதற்கான தேவை ஏற்படாது என்றார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த    ராஜபக்‌ஷ ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (07) இடம்பெற்றது. இதன்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமைக்கான அடிப்படை காரணங்கள் தொடர்பில், சர்வதேசத்துக்கு
தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் ஆதரவை தொடர்ந்து வழங்குவதற்கு, புதிய அரசாங்கத்தின் மீது எவ்விதமான சந்தேகத்தையும் கொண்டிருக்கவேண்டிய தேவையில்லையென, ஜனாதிபதி தெளிவுப்படுத்தியுள்ளார் என்றும் பிரதமர் மஹிந்த    ராஜபக்‌ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க போவதாக தெரிவித்திருந்த, அத்துரலிய ரத்ன தேரரும், பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .