Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 நவம்பர் 08 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
எதிர்வரும் 14ஆம் திகதியன்று, ஜனாதிபதியின் அக்கிராசன உரை மட்டுமே இடம்பெறும் என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன, அந்தத் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் கூட்டப்படாது. அத்துடன், அன்றையதினம், நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படும் என்றார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமைத் தொடர்பான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்துக்கு, தேவை ஏற்படின் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் அலுவலகத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதோடு, எதிர்வரும் 14ஆம் திகதிக்குப் பின்னரான, நாடாளுமன்ற அமர்வுகள் குறித்து கட்சித் தலைவர்கள் கூடி ஆராய்வார்கள் என்றார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்ததை சவாலுக்கு உட்படுத்தி, இதுவரையில் எவரும் உயர் நீதிமன்றத்துக்கு செல்லவில்லை எனக் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம் தவறானதா? சரியானதா? என்பது குறித்த சர்வஜன வாக்கெடுப்புக் செல்வதற்கான அதிகாரம் ஜனாதிபதியிடம் காணப்படுவதாகவும் எடுத்துரைத்தார்.
ஜனாதிபதியின் உத்தரவை மீறி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை. பெரும்பான்மை நிரூபிப்பது, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவது போன்ற எந்தவொரு செயற்பாடுகளும் எதிர்வரும் 14ஆம் திகதிக்கான நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்த அவர், 14ஆம் திகதியன்று நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago