2025 ஜூலை 17, வியாழக்கிழமை

நாட்டைக் காட்டி கொடுத்ததாகத் தெரிவித்தவர்களுக்கு ஜனாதிபதியின் உரை சிறந்த பதிலடி

ஆர்.மகேஸ்வரி   / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  சர்வதேசத்திடம் நாட்டைக் காட்டிக்  கொடுத்து விட்டதாக இலங்கையின் சில அரசியல்வாதிகள் கடந்த மூன்றரை வருடங்களாக தெரிவித்து வந்த குற்றச்சாட்டுகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரின் முதலாவது கூட்டத்தில் நேற்று (25)  உரையாற்றி பதில் வழங்கியுள்ளாரென அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க,

தாய் நாட்டை நேசிக்கும் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதியின் உரை அமைந்திருந்த நிலையில், தாய்நாட்டுக்கு முக்கியதுவம் கொடுத்து தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஜனாதிபதியின் செயற்பாடுகளால் தான் பெருமையடைவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X