Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2020 மார்ச் 19 , பி.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த ஆண்டு வரை, எரிபொருள் விலையை ஒரு தட்டையான விகிதத்தில் வைப்பதற்கு, தன்னுடைய தீர்மானங்கள் இன்றி, அமைச்சரவையால் முடிவுகள் எடுக்க முடியாது என்று, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இது தொடர்பாக தமிழ்மிரருக்கு, இன்று (19) கருத்துத் தெரிவித்த அவர்,
அமைச்சரவைப் பத்திரமொன்றை தான் அமைச்சரவையில் சமர்ப்பிக்காமல், இந்தத் தீர்மானத்தை அமைச்சரவையில் முன்னெடுக்க முடியாது என்றும் பெற்றோல் விலை தொடர்பாக தீர்மானிக்கும் போது, இது என்னுடைய தீர்மானத்தையே அமைச்சரவைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் கூறினார்.
எவ்வாறாயினும் பெற்றோலிய விலையில் மாற்றம் கொண்டுவராது, அதை ஒரு தட்டையான விகிதத்தில் வைத்திருப்பது என்பது தொடர்பாக, இன்று (19) அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், உலக சந்தையில், கச்சா எண்ணெயின் விலை கணிசமாக குறைந்துள்ளது என்று கூறிய அவர், எவ்வாறாயினும், நாட்டில் எரிபொருள் விலையைக் குறைக்கும் போது, அதற்கான சலுகையை, நாட்டிலுள்ள ஒவ்வொரு தனி நபரும் அனுபவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
எரிபொருளுக்கென்று சலுகை வழங்கப்பட்டால், அது நாட்டிலுள்ள அனைவருக்கும் நன்மை பயக்காது என்பது துரதிர்ஷ்டவசமாது என்று கூறிய அமைச்சர் மஹிந்த அமரவீர, எனவே, எரிபொருள் மூலம் கிடைக்காத சலுகையை, நீர், மின்சாரம் உள்ளிட்ட பயன்பாட்டு சலுகைகள் மூலம் வழங்குவது குறித்து, அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 Jul 2025