2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

’நான் கொழும்பு - அவர் பொலன்னறுவை; இதுவே வேறுபாடு’

Editorial   / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான், நகரமயமாக்கப்பட்ட கொழும்பைச் சேர்ந்தவரென்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கிராமிய மயப்பட்ட பொலன்னறுவையைச் சேர்ந்தவரென்றும் தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதுவே தாம் இருவரிடையே காணப்பட்ட கலாசார மாற்றமென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு நேற்று (28) உரையாற்றியிருந்த ஜனாதிபதி, தனக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், அரசியல் ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் கூட வேறுபாடுகள் காணப்படுவதாகக் கூறியிருந்தார்.

இது தொடர்பில், இன்று சர்வதேச ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசிய ரணிலிடம், அந்த ஊடகவியலாளர்களில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது மேற்கண்டவாறு கூறியுள்ள அவர், மேற்கண்ட வேறுபாட்டைத் தவிர, தனக்குத் தெரிந்த வேறு ஏதும் வேறுபாடுகள் கிடையாதென்றும் நாட்டின் பிரதமர் தொடர்ந்தும் தானென்றும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .