Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 23 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊழல் ஒழிப்பு பிரிவ நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமாரவை சந்திப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்ற இந்தியர் ஒருவர் நேற்று முன்தினம் (21) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த இந்தியர் பல தடவைகள் நாமல் குமாரவை சந்திப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றதாகவும், எனவே குறித்த நபர் மீது சந்தேகம் இருப்பதால், தான் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்ததாகவும் நாமல் குமார குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து 53 வயதான சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாமல் குமாரவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய பிரஜைக் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சட்டம் மற்றும் ஒழுங்குகள் பிரதி அமைச்சர் நளின் பண்டார, நாமல் குமார கூறும் வகையில் பாதுகாப்பு கோரிக்கை எதுவும் இதுவரை எமது புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கவில்லை. எனினும் நாமல் குமாரவின் பாதுகாப்பு குறித்து எமது அதிகாரிகள் அவதானத்துடன் செயற்படுகின்றனர் எனத் தெரிவித்த பிரதி அமைச்சர் நளின் நாமல் குமாரவுக்கு மேலதிக பாதுகாப்பு தேவை ஏற்படும் பட்சத்தில் வழங்கி வைக்கப்படும் எனவும், நாமல் குமாரவின் வீட்டுக்குச் சென்ற சந்தேகநபரிடம் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகள் முன்னெடுக்கபடுமெனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜனாதிபதியை கொல்வதற்கான சதி முயற்சிக் குறித்த வாக்குமூலம் வழங்க எதிர்வரும் 26ஆம் திகதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு நாமல் குமார அழைக்கப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .