2025 ஜூலை 05, சனிக்கிழமை

நாலகவுக்கும் மதுஷ்-அமல் பெரேராவுக்குமிடையிலான தொடர்புகள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

Editorial   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாளக் குழுவின் தலைவரான மதுஷ், பாடகர் அமல் பெரேரா ஆகியோருடன் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவுக்கு இருக்கும் தொடர்புகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் அறிவித்துள்ளனர்.

மாக்கந்துர மதுஷ், அமல் பெரேராவுடன் கடந்த காலங்களில் நாலக சில்வாவுக்கு தொடர்புகள் இருப்பதாக வெளிவந்த தகவல்களை அடிப்படையாக வைத்து, விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் சர்வதேச பொலிஸாரின் தலையீட்டுடன் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் அறிவித்துள்ளனர்.

2016ஆம் ஆண்டு பாடகர் அமல் பெரேராவுக்கும் நாலக டி சில்வாவுக்கும் இடையில் காணப்பட்ட தொடர்பு குறித்த தகவல்கள் உறுதியகியுள்ளதென்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ஆகிய இருவரையும் கொலை செய்யத் சதித் திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டப் போதே, குற்றப்புலனாய்வு பிரிவினர் இந்த விடயங்களை நீதவானின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர்.

அத்துடன் நாலக டி சில்வாவை  எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .