Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 26 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வா, வெலிக்கடைச் சிறைச்சாலையில் வை.ஓ பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். வேறு கைதிகள் இன்றி, அவர் மாத்திரம் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று, சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், உரிய நடைமுறைகளுக்கமைய, கொழும்பு மெகசின் சிறைச்சாலையிலேயே நாலக்க சில்வா தடுத்து வைக்கப்பட்டிருக்க வேண்டுமென்றும் அவரது பாதுகாப்புக் கருதியே, வெலிக்கடையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நேற்று (25) இரவு, சிறைச்சாலைக்கு நாலக்க சில்வாவை அழைத்து வருவதற்கு முன்னரே, அவரைப் பரிசோதிப்பதற்காக, அம்பியூலன் வண்டி மூலம் வைத்தியரொருவர் சிறைச்சாலைக்கு வந்திருந்ததாகத் தெரியவருகிறது.
எவ்வாறாயினும், அவரைப் பரிசோதித்த போது, அவர் நோய்வாய்ப்பட்டு இருக்கவில்லை என்றுக் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், நாலக்க சில்வாவை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு, அந்த வைத்தியர் பரிந்துரை செய்துள்ளார்.
இருப்பினும், அதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்த நிலையில், அவ்விடத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
2 hours ago
2 hours ago