2025 ஜூலை 17, வியாழக்கிழமை

நாளையே ஆட்சியேற்க தயார்; மஹிந்த அதிரடி

Editorial   / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அனைவரும் அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும். தன்னிடம் ஆட்சிப் பொறுப்பை நாளையே வழங்கினாலும், தான் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், மரணப் பயத்தை ஏற்படுத்தி தான் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வதை எவராவது தடுக்க நினைப்பார்களாயின் அது தவறானது எனக் கூறிய அவர், தனது பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X