2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘நாளொன்றுக்கு 16 மணித்தியாலங்கள் மக்களுக்காக செலவிடும் ஜனாதிபதி’

Editorial   / 2019 ஜனவரி 08 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் சிறந்த தலைவரென்றும் இவர் நாளாந்தம் மக்களுக்காக 16 மணத்தியாலங்கள் கடமையாற்றுகிறாரென, ஜனாதிபதியின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் எரிக் வீரவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசியலில் ஈடுபடுவதற்காகவே தான் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் பதவியிலிருந்து விலகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

அத்துடன் தான் எதிர்வரும் பொதுத் ​தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாகவும், ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராகக் கடமையாற்றிக் கொண்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முடியாதென்பதால், ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்ததாகவும் அவர்  தெரிவித்துள்ளதுடன், பிரத்தியேகச் செயலாளர் பதவியிலிருந்து விலகினாலும் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளராகக் கடமையாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .