2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

நிசங்க சோதிபதி - பாலித்த பெர்ணான்டோவுக்கு பிடியாணை

Editorial   / 2019 ஓகஸ்ட் 02 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவன்காட் மெரின்டைம் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் நிசங்க சோதிபதி மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோரை கைதுசெய்வதற்கான பிடியாணையை கொழும்பு மேல் நீதிமன்றம், இன்று பிறப்பித்துள்ளது.

இவர்கள் இருவருக்கும் எதிரான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவன்காட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு அவன்காட் நிறுவனத்திற்கு வாய்ப்பு வழங்குவதற்காக 355 இலட்சம் ரூபாய் இலஞ்சம் வழங்கியமை மற்றும் பெற்றுக் கொண்டமை தொடர்பிலான வழக்கிலேயே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X