Freelancer / 2022 பெப்ரவரி 21 , மு.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
அரிசி, சீனி உட்பட நுகர்வுப் பொருட்களுக்கு ஏற்பட்டிருந்த தட்டுப்பாடு மற்றும் பிரச்சினைகள் படிப்படியாக தீர்க்கப்பட்டுள்ளன எனவும் ஏனைய பிரச்சினைகளும் விரைவில் தீர்க்கப்படும் எனவும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்று தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமை மா வழங்கும் திட்டத்தை நேற்று (20) ஆரம்பித்த பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
தமிழ், சிங்களப் புத்தாண்டு காலப்பகுதியில் தட்டுப்பாடின்றி மக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கான சூழலை உருவாக்குவதற்காக நிதி அமைச்சர் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டது என்றும் அந்த குழு வாராந்தம்கூடி நிலைமைகளை சீர்செய்துவருகின்றது என்றும் தெரிவித்தார்.
பெருந்தோட்ட மக்களுக்கு தற்போது மானிய விலையில் கோதுமை மா வழங்கப்படுகின்றது. எதிர்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது சம்பந்தமாகவும் ஆராயப்படும் என்றார்.
தேயிலை ஏற்றுமதிமூலம் எமக்கு அந்நிய செலாவணி வருகின்றது. உலக சந்தையில் சிறந்த கேள்வி உள்ளது. இதற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்களே பங்களிப்பு வழங்கிவருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிக்கா அம்மையார், மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன போன்ற ஜனாதிபதிகளின்கீழ் தொண்டமான் குடும்பம் செயற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் மலையக மக்களுக்கு ஆற்றிய சேவைகளை மறந்துவிடமுடியாது. ரமேஷ் உள்ளிட்டவர்கள் அதற்கு உறுதுணையாக நின்றனர் எனவும் தற்போது சிறந்த படித்த இளம் தலைவராக ஜீவன் தொண்டமான் செயற்பட்டுவருகின்றார் என்றார்.
21 minute ago
30 minute ago
36 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
30 minute ago
36 minute ago
42 minute ago