Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜூன் 23 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றத் தேர்தலுக்காக, நான்கு மாவட்டங்களில் தங்களுடைய கட்சித் தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக, பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், வேட்பாளராகக் களமிறங்கிய “எங்கள் மக்கள் சக்தி”இன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் நான்கும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளாமலேயே நிராகரிக்கப்பட்டத
மேன்முறையீட்டு நீதியரசர்களான ஏ.எச்.எம்.டீ.நவாஸ், யோஹித ராஜகருணா ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதியரசர்கள் குழுமால் இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டதுடன் மனுவை விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கான நோட்டீஸை விடுவதற்கும் நீதியரசர்கள் நிராகரித்துவிட்டனர்.
“எங்கள் மக்கள் சக்தி”ஆல் குருநாகல், கொழும்பு, களுத்துறை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராகவே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட்மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
கலகொடஅத்தே ஞானசார தேரர், அத்துரலிய ரத்ன தேரர் உள்ளிட்டோரால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
“எங்கள் மக்கள் சக்தி” கட்சியால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களுடன் இணைக்கப்பட்டுள்ள சத்தியக்கடதாசியில் சமாதான நீதவானின் கையொப்பமில்லையெனத் தெரிவித்தே, அம்மனுக்கள் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.
எனினும், தேர்தல் சட்டத்தின் பிரகாரம், வேட்பு மனுக்களை அவ்வாறு நிராகரிப்பதற்கு தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அதிகாரமில்லையென மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் காரணங்களுக்காக, வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானதென தீர்ப்பளித்து, அந்தத் தீர்மானத்தை வலுவலற்றதாக்குவதற்கு ரிட் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரியே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரப்பட்டது.
அத்துடன் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களை மீளவும் பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு கட்டளையிடுமாறும், அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago