2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

நீதிமன்ற அவமதிப்பு: துமிந்த நாகமுவ கைது

Freelancer   / 2022 ஜனவரி 04 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்துக்கு முன்னால் போராட்டம் நடத்தி மன்றை அவமதித்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ, கடுவெல பொலிஸாரால் இன்று (04) பிற்பகல் பொரளையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட திறந்த பிடியாணையின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கடுவெல பொலிஸார் தெரிவித்தனர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்துக்கு எதிராக பாராளுமன்ற  சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட ஐவருக்கு பிணை வழங்குமாறு கோரி சந்தேகநபர் உள்ளிட்ட குழுவினர் நவம்பர் 04ஆம் திகதி, நீதிமன்றத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்தே நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சந்தேக நபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவரை, கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது  தலா 500,000 ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம், வழக்கை பெப்ரவரி 1ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .