2025 ஜூலை 14, திங்கட்கிழமை

‘நீதிமன்ற சுயாதீனத்தைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்தின் சுயாதீனத்தையும், நீதிமன்றங்கள் மீது மக்கள்  கொண்டுள்ள மக்களின் நம்பிக்​கையையும் உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தன்னால் எடுக்கப்படுமென, புதிய பிரதம நீதியரசர் நளின் பெரேரா தெரிவித்துள்ளார்.

புதிய பிரதம நீதியரசரை வரவேற்கும் நிகழ்வு, கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தில், இன்று (22) இடம்பெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விசேடமாக ஊழலற்ற நீதிமன்றக் கட்டமைப்பை நாட்டில் ஏற்படுத்துவதற்கான சகல முயற்சிகளையும் தான் முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

அடி மட்டத்திலிருந்து உயர்பதவிகளை வகித்த தனக்கு இவ்வாறு பிரதம நீதியரசர் பதவியை வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் நளின் பெரேரா மேலும் குறிப்பிட்டார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .