2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

நீதிமன்றம் செல்வது மைத்திரி தரப்பினரின் சுதந்திரம்

Simrith   / 2024 ஏப்ரல் 21 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றம் செல்வது அவர்களின் மைத்திரி தரப்பினரின் சுதந்திரம் என்றும், அதற்கு நாம் தடைகளை விதிக்க முடியாது என்றும் சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் அநுராதபுர பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

அரசியல் குழுத்தெரிவுகள் யாப்பினை மீறும் வகையில் அமைந்திருப்பது தொடர்பில் முன்னாள் தவிசாளர் மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினர் நீதிமன்றத்துக்கு செல்வதற்கு தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாம் கட்சியின் யாப்பு விதிகளுக்கு அமைவாகவே புதிய தெரிவுகளை மேற்கொண்டுள்ளோம். அதற்கு எதிராக அவர்கள் நீதிமன்றத்தினை நாடுவதாக இருந்தால் அதற்கு நாம் தடைகளை ஏற்படுத்த முடியாது. நீதிமன்றம் செல்வது அவர்களின் சுதந்திரம்.

எம்மைப் பொறுத்தவரையில் கட்சியின் ஆதரவாளர்கள் இன்னமும் கட்சியுடனேயே உள்ளனர். அவர்கள் கட்சித்தலைமையின் செயற்பாடுகளின் காரணமாக அதிருப்தி அடைந்திருந்தனர். ஆகவே அவ்விதமானவர்களை மீண்டும் கட்சியுடன் இணைந்து மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கே விரும்புகின்றார்கள்.

அந்த வகையில் அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம். அடுத்துவரும் காலத்தில் கட்சியை மீளக் கட்டியமைத்து முன்னெடுக்கும் செயற்பாட்டில் பங்கெடுக்கவுள்ளோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .