2025 ஜூலை 14, திங்கட்கிழமை

நீர்க் கட்டணம் 65% அதிகரிக்கும்?

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தவொரு காரணமுமின்றி, நீ​ர்க் கட்டணத்தை 65 சதவீதமளவில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்​கை எடுத்துள்ளதென, நுகர்வோரைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்ட அமைப்பு தெரிவிக்கின்றது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீர்க் கட்டணத்தையும் அதிகரித்து, மக்களின் சுமையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

நீர்க் கட்டணத்தை அதிகரிக்க முன்னர், நுகர்வோரின் தேவைகளை நிறைவேற்ற, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மேற்படி அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானதே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம், நீர்க் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி முடிவு, அமைச்சரவை வசமுள்ளதென்றுக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .