Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டத்தில் அதிக மழையுடான சீரற்ற வானிலை காரணமாக நேற்று (30) மாலை 5 மணிமுதல் இன்று (01) மாலை 4 மணிவரையிலான காலப்பகுதியில் 92 பேர் இடம் பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக வலப்பனை மற்றும் கந்தப்பளை பிரதேசத்தில் பாதிப்புகள் அதிகமாக காணப்படுவதாக மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொகவந்தலாவை, நோர்வூட், அக்கரப்பத்தனை, டயகமை, மற்றும் மாகாஸ்தோட்ட ஆகிய பகுதிகளிலும் வெள்ளநீர் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் சேத விவரங்கள் அவ்வப்பகுதி கிராமசேவகரிடத்தில் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதான வீதிகளில் மண்சரிவுகள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளதாகவும் மண்களை அகற்றும் பணிகள் முன்னடுக்கப்பட்டு வருவதுடன் , ஆற்று ஓரங்கள் மற்றும் மண்மேட்டு பகுதிகளில் வசிப்போர் அவதானத்துடன் இருக்குமாறும் பாதிப்புகள் ஏற்படும் நிலை கண்டறியப்பட்டால் அவ்வப்பகுதி கிராமசேவகர்கள் ஊடாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கவனத்திற்கு கொண்டுவரும்படி வேண்டுகோள் விடுப்பதாகவும் நுவரெலியா இடர்பாடுகள் முகாமைத்துவ உதவி பணிப்பாளர் தெரிவித்தார்.
ஆ.ரமேஸ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago