Freelancer / 2023 பெப்ரவரி 24 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையகத்தின் சில பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக முட்டைக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நுவரெலியா, கந்தப்பளை, ராகலை மற்றும் உடபுஸ்ஸல்லாவ ஆகிய நான்கு நகரங்களில் இவ்வாறு முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், வெதுப்பகங்கள், ஹோட்டல் உணவு தயாரிப்புகளில் பாரிய சிரமங்கள் தோன்றியுள்ளன.
குறித்த நகரங்களில் ஒரு சில வியாபார நிலையங்களில் வெள்ளை நிற முட்டை 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை முட்டை விற்பனை செய்யப்படுவது தொடர்பில் நுவரெலிய மாவட்ட அதிகார சபைக்கு அறிவித்த போதிலும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். (N)
12 minute ago
30 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
30 minute ago
5 hours ago