2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நெல் கொள்வனவிற்காக நிதி ஒதுக்கீடு

Freelancer   / 2024 மார்ச் 23 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரும்போக நெல் கொள்வனவிற்காக 1000 மில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை தெரிவித்தது.

திறைசேரியிலிருந்து 500 மில்லியன் ரூபாவும் விவசாயிகள் நம்பிக்கை நிதியத்திலிருந்து 500 மில்லியன் ரூபாவும் கிடைக்கப்பபெற்றுள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

பெரும்போக நெல் கொள்வனவிற்காக வேளாண்மை மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு களஞ்சிய சாலைகள் திறக்கப்பட்டுள்ளன

கடந்த ஐந்து நாட்களில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் 9 லட்சத்து 4 ஆயிரத்து 202 கிலோ கிராம் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, 95 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும்   7 வலயங்களிலுள்ள 241 நெல் களஞ்சியசாலைகளை நெற்கொள்வனவிற்காக தாயார் நிலையில் வைத்துள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .