Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 மே 31 , மு.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.நிரோஷினி
புகைப்பொருள் நிறுவனத்தினால் மிகவும் சூட்சுமமான முறையில், இரண்டாந்தரப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரியாமல் சென்றுள்ளார் என்றும், அந்நிறுவனம் ஜனாதிபதியை ஏமாற்றிவிட்டது என்றும் தெரிவித்த புகையிலை மற்றும் மதுபான தேசிய அதிகார சபையின் தலைவரான வைத்தியர் பாலித அபேகோன், புகையிலை தொடர்பான நோய்களின் காரணமாக இலங்கையில், ஒவ்வொரு வருடமும் 20 ஆயிரம் பேர் இறங்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
இவ்வாறான மரணங்கள் ஏற்படுவதற்கான பொறுப்பை, சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
'சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினமான நாளை (இன்று) „வெற்றுப் பொதியிடலுக்கு தயாராகுவோம்...
(plain package) எனும் தொனிப்பொருளின் கீழ், பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கவுள்ளன.பெரும்பாலான சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள், சிறுவர்களை இலக்கு வைத்தே, சிகரெட் தயாரிப்புகளில் ஈடுபடுகின்றன. நாளொன்றுக்கு, ஆகக்குறைந்தது 80 இளைஞர்களையாவது புகைத்தலுக்கு அடிமையாக்க வேண்டும் என்ற நோக்குடன், இந்நிறுவனங்கள் செயற்படுகின்றன.
அந்தவகையில், இந்த வெற்றுப் பொதியிடலுக்கு தயாராகுவோம் (plain package) எனும் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம், மேற்கூறப்பட்ட உத்திகள் கையாள்வதற்கு முட்டுக்கட்டையாக அமையும். அதாவது, வெற்றுப் பக்கெட்டை அறிமுகம் படுத்தவேண்டும் என்பதே இக்கருப்பொருளின் நோக்கமாகும்.
வருடாந்தம் 20 ஆயிரம் பேரைக் கொலைசெய்யும் சிகரெட் கம்பனியின் இலாபத்தில் 92 சதவீதம், பிரித்தானியா மற்றும் அமெரிக்காவுக்குக் கிடைக்கின்றது.
'புகைத்தல் காரணமாக இலங்கையில், நாளொன்றுக்கு 60 பேர் மரணிக்கின்றனர். இதனைப் பார்த்து, குறைந்தது 100 பேராவது புகைத்தல் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு முயல வேண்டும்.
வைத்தியரை நாடுவதால் புகைத்தல் பழக்கத்திலிருந்து விடுபட முடியாது. ஒவ்வொருவரும் தானாக முயன்று இதிலிருந்து விடுபடவேண்டும்' எனவும் குறிப்பிட்டார்.
38 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
2 hours ago