2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பொங்கலுக்கு முன்னரே மீனவர்களை விடுவிக்கவும்

Gavitha   / 2016 ஜனவரி 06 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 94 மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை எதிர்வரும் தைப் பொங்கலுக்கு முன்னர் விடுவிக்க மத்தியரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய மீனவ பேரவை தலைவர் இளங்கோ தெரிவித்துள்ளார்.

கடந்த இந்திய மத்தியரசு, இரு தரப்பு மீனவர்களின் பேச்சுவார்த்தைகளுக்கு மூன்று முறை சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திய போதும் இந்த அரசு அதற்கான எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என இந்திய மீனவ பேரவை தலைவர் குற்றஞ் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் தி ஹிந்து வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இலங்கை- இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமாயின், இந்திய மத்தியரசு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இரு தரப்பு மீனவர்களின் 4 ஆம் கட்ட பேச்சுவார்த்ததைக்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

இந்த மீனவர் பிரச்சினை குறித்து மத்தியரசு எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்தே மாநில மற்றும் மாவட்ட மீனவ அமைப்புகள் தமது எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளன என்றார்.

இலங்கை கடற்படையினரால் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்ட 40 கோடி பெறுமதியான 71 படகுகள் பயன்படுத்தபடாத நிலையில் உள்ளதால் அவை சேதமடைந்து வருவதாக அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X