Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஜனவரி 21 , பி.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் வீரர்களை பணத்துக்காக போட்டி நிர்ணயத்தில் ஈடுபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து, தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
உலக பொருளாதார மன்றத்தில் கலந்துகொள்வதற்காக சுவிட்சர்லாந்தின் டவோஸ் நகருக்குச் சென்றுள்ள பிரதமர், அங்கு புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றின் லந்துகொண்டிருந்தார். இதன்போது, இலங்கை வீரர்களின் போட்டி நிர்ணய விவகாரம் தொடர்பில் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர், 'கிரிக்கெட் தொடர்பில் இவ்வாறானதொரு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது என்றால், அது குறித்து நாம் தீவிரமாக விசாரிப்போம். ஒரு நாட்டின் மீது குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்படுமேயானால், அது தொடர்பில் வெளிப்படையான முறையில் கண்டறிவது அவசியமாகும்.
அதன்மூலமே, நாட்டினதும் எமது வீரர்களினதும் தூய்மையை நிரூபிக்க முடியும். அப்போது தான், அது இந்த நாட்டு வீரர்கள், இரசிகர்கள் மற்றும் நாட்டுக்குப் பெருமை சேர்க்கும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவரளித்த பதில்களும் பின்வருமாறு,
கேள்வி: சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் மேக்கொண்டுள்ள ஒப்பந்தம் தொடர்பில், விளக்கமளிக்க முடியுமா?
பதில்: இது குறித்து, சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். உலகப் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக, நாம் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இன்றிலிருந்தே ஆழமாக சிந்திக்கவேண்டிய தேவை உள்ளது. அதற்கமைவாகவே, இந்த ஒப்பந்தத்தைத் தயாரிக்க எதிர்பார்த்துள்ளோம்.
கேள்வி: தமிழ் மக்களின் பிரச்சினைகளை, உங்களது அரசாங்கம் எவ்வாறு கையாளவுள்ளது?
பதில்: இப்பிரச்சினைகள் குறித்துஇ தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். புதியதொரு தேர்தல் முறைமையை நோக்கிச் செல்வது குறித்தும் பேசி வருகின்றோம். தமிழ் மக்களின் காணிகள்இ திரும்பவும் அவர்களிடமே கையளிக்கப்பட்டு வருகின்றன.
மீள்குடியேற்றப்படும் மக்களின் தேவைகளை அறிந்துஇ அவர்களுக்கான உதவிகளையும் செய்துவருகின்றோம். அதேபோன்றுஇ பொலிஸ் சேவையில்இ தமிழர்களை இணைக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாம் அனைவரும் இலங்கையர்களே.
கேள்வி:தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கை எவ்வாறாக இருக்கும்?
பதில்: தமிழ் அரசியல் கைதிகள் என்றோ சிங்கள அரசியல் கைதிகள் என்றோ, இலங்கையில் எவரும் இல்லை. கைது செய்யப்பட்டிருந்த, குற்றச்சாட்டுகள் அற்ற பலரை விடுவித்துள்ளோம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .