Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜனவரி 18 , பி.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியலில், பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம், சட்டங்களை இயற்றிவரும் நிலையில், மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களால், தாம் நாடாளுமன்ற வளாகத்தினுள்ளேயே பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக இரு பிரதான கட்சிகளைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், தமது கட்சி மேலிடங்களிடம் முறையிட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் நாடாளுமன்ற அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமது கையைப் பிடித்ததாக, பெண் நாடாளுமன்ற உறுப்பினரொருவர், தமது கட்சி மேலிடத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதேவேளை, நாடாளுமன்ற அமர்வு முடிவடைந்த சில நிமிடங்களில், மூத்த நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தம்மிடம் ஆபாசமாகவும் சொல்லத்தகாத வார்த்தைகளாலும் பேசியதாக மற்றுமொரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர், தமது கட்சி மேலிடத்தில் முறையிட்டுள்ளார்.
இதுகுறித்து எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்க கட்சி மேலிடங்கள் தவறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .