2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பாதுகாப்புச் செயலாளரை ஹூஸைன் சந்தித்தார்

Gavitha   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், பாதுகாப்பமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியை, நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
பாதுகாப்பமைச்சில், இச்சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில், உயர்ஸ்தானிகரோடு, ஐக்கிய நாடுகளின் தூதுக்குழுவொன்றும் பங்குபற்றியதாக, பாதுகாப்பமைச்சுத் தெரிவித்தது.

பாதுகாப்பமைச்சு சார்பாக, அமைச்சின் அலுவலர்கள், பாதுகாப்புப் பணியாற்றொகுதியின் பிரதானி, இராணுவம் மற்றும் விமானப்படையின் தளபதிகள், கடற்படையின் பணியாற்றொகுதித் தலைவர் ஆகியோர் பங்குபற்றினர்.

இதன்போது, உயர்ஸ்தானிகருக்கான நினைவுப்பரிசொன்றையும், பாதுகாப்புச் செயலாளர் வழங்கியதாக, பாதுகாப்பமைச்சு மேலும் தெரிவித்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X