2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

போதையில் மோட்டர் சைக்களில் ஓடிய இரு யுவதிகள் கைது

Princiya Dixci   / 2016 ஜனவரி 10 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுபோதையில் ஒரு மோட்டர் சைக்களில் பயணித்த இரண்டு பெண்கள், இன்று ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலை களுத்துறை, வடியமண்கட சந்தியில் பொலிஸாரிடம் பிடிபட்டனர். 

தாம், ஒரு திருமணத்துக்குச் சென்று அங்கு மதுபானம் அருந்தி கொண்டாடியதாக பொலிஸாரிடம் அவ்விருவரும் கூறினர். 

எனினும், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பெண், கடும் போதையில் நிற்க முடியாது தள்ளாடியதாக பொலிஸார் கூறினர். 

இந்த இரு இளம் பெண்களும் பாணந்துறையிலுள்ள ஒரு ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் என விசாரணையின்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர். 

தாம் வாதுவை நகரில் ஒரு விடுதியில் தங்கியிருப்பதாகவும் அவர்கள் பொலிஸாரிடம் கூறினர். இவர்கள், வாதுவை நகரைத் தாண்டி ஏன் காலி வீதி வழியே வந்தனர் என்பது கேள்வியாகும் என பொலிஸார் கூறினர்.

மோட்டார் சைக்கிள் குறுக்கும் மறுக்குமாக ஓட்டப்பட்டு வந்ததால் தாம் இவர்களை நிறுத்தியதாக பொலிஸார் கூறினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X