2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

புதிய வரிகளுக்கு அவசியமில்லை

Thipaan   / 2016 ஜூன் 07 , பி.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

அடுத்துவரும் காலங்களில், புதிய வரிகளை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வரிகளை இலகுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, எதிர்க்கட்சி எம்.பி.யான உதய கம்மன்பில கேட்ட குறுக்குக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னதாக பதிலளித்த அமைச்சர் ரவி கருணாநாயக்க, 2015ஆம் ஆண்டினுள் எதிர்பார்க்கப்பட்ட வரி 1293 பில்லியன் ரூபாயாகும். வரியல்லாத வருமானம் 182 பில்லியன் ரூபாயாகும். இது 2015ஆம் ஆண்டின் வருமானத்துடன் ஒப்பிடும் போது யதார்த்தமாக அமைந்துள்ளது என்று கூறினார்.

இதன்போது குறுக்கிட்ட உதய பிரபாத் கம்மன்பில எம்.பி, 2016ஆம் ஆண்டு வற் (பெறுமதி சேர் வரியை) அறிமுகப்படுத்தியதனால், மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். இவ்வாண்டு எதிர்காலப் பகுதிக்கும் புதிய வரிகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் உள்ளதா என்று வினவினார்.

கடந்த அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்களை அடைப்பதற்கே, புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. எதிர்காலத்தில், அவ்வரிகள் தளர்த்தப்படும் என்பதுடன் புதிய வரிகளை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த வேண்டிய தேவையில்லை என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .