2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பொன்சேகாவை விசாரிக்கவும்

Kogilavani   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இராணுவத்தின் முன்னாள் தளபதியை இலங்கை அரசாங்கம், நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமை, யுத்தக் குற்றங்களை விசாரிப்பதற்காக கொடுத்த வாக்குறுதிக்கு முரணாக உள்ளதென, மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் சிரேஷ்ட இராணுவத் தலைவர்களை அரசாங்கம் பாதுகாக்க உள்ளதை பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமை, குறிப்பாக உணர்த்துகின்றது என ஆசியப் பணிப்பளர் பிராட் அடம்ஸ் கூறியுள்ளார்.

வெறும் அரிதாரம் பூசுவதாக அன்றி, பொறுப்புக் கூறுதல் தொடர்பாக உண்மையான கவனம் செலுத்துகின்றது என இலங்கை அரசாங்கம், மக்களுக்கு ஐ.நாவுக்கும் அர்த்தமுள்ள முறையில் வெளிப்படுத்த வேண்டும். யுத்தக் குற்றங்களுக்காக நீதி வழங்குவதாகக் கூறிய அரசாங்கத்தை நம்பிய பாதிக்கப்பட்டடோருக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும், நம்பிக்கைத் துரோகமாக பொன்சேகாவின் நியமனம் அமைந்துவிட்டது என அடம்ஸ் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரைச் சந்தித்து, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக தனது முழுக் கடப்பாட்டை மீள வலியுறுத்திய அன்றே பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X