Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2016 மே 28 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜி-7 அமைப்பானது பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்கு ஆசியாவின் நலனை நிலைப்படுத்தத் தேவையான விடயங்களை கண்டறியும் என்ற ஜப்பானின் உத்தியோகபூர்வ அறிவிப்பானது, இலங்கை இந்த மாநாட்டில் கலந்துகொள்வதன் பொருத்தப்பாட்டைக் கோடிட்டுக்காட்டுகிறது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இந்த அறிவிப்பானது, இம்மாநாட்டிற்கு எம்மைத் தெரிவு செய்தமைக்கான ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபேவின் நியாயத்தையும் உறுதிப்படுத்துகிறது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
ஜப்பான் இசெசிமாவில் நேற்று (மே 27) நடைபெற்ற ஜி-7 எல்லை கடந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஒரு புரட்சிகரமான ஆட்சி மாற்றத்துடன் தமது அரசாங்கம் பல்லின சமூக சூழலில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் நிலையான அபிவிருத்தி சூழழுக்குமான வழியை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டிருப்பதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, தற்போது எமது மக்கள் சுதந்தரமாகவும் மனித உரிமைகள் மதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளார்கள் எனத் தெரிவித்தார்.
நாட்டில் ஜனநாயகத்தையும் சட்ட ஆட்சியையும் நல்லாட்சியையும் தாபிப்பதற்கு தேசிய ஐக்கிய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் உலகின் மிகவும் செல்வாக்குவாய்ந்த நாடுகளின் தலைவர்களுக்கு விளக்கியதுடன் விரிவான அபிவிருத்தி முயற்சிகளுக்கு எமக்கு நிதி பற்றாக்குறையாக உள்ளது. எனவே, அபிவிருத்தியடைந்த நாடுகளின் பல்தரப்பு மற்றும் இருதரப்பு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்றும் கோருகின்றோம் எனக் குறிப்பிட்டடார். அத்துடன், ஜனாதிபதி, 2016ஆம் ஆண்டுக்கான ஜி-7 உச்சி மாநாடு இது தொடர்பில் இலங்கை போன்ற நாடுகளை கவனத்திற் கொள்ளும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
எமது பிரச்சினைகள் தொடர்பில் வினையமாகக் கவனம் செலுத்தப்படும் பட்சத்தில் எனக்கான உங்களது அழைப்பு எல்லைகள் தாண்டிய உண்மையான பயனைக் கொண்டுவரும் என்றும், இந்த கூட்டத்தொடரின் போது ஜி-7 நாடுகளின் தலைவர்கள் ஜி-7 எல்லை கடந்த நாடுகளின் தலைவர்கள் வெளிப்படுத்திய நட்புறவு மற்றும் புரிந்துணர்வை தான் பெரிதும் பாராட்டுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
46 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
2 hours ago