2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பிரதானியின் காரியாலயத்துக்கு சீல் வைத்தமைக்கு எதிர்ப்பு

Princiya Dixci   / 2016 ஜனவரி 06 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை துறைமுக அதிகாரசiயின் தொலைத்தொடர்பு மற்றும் மக்கள் தொடர்பாடல் பிரிவுக் காரியாலயத்துக்கு சீல் வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அந்நடவடிக்கைக்கு எதிராக உடனடியாகச் செயற்படுமாறு கோரியும் இலங்கை துறைமுக அதிகாரசபையின் அகில இலங்கை பொதுச் சேவைகள் சங்கம், புதன்கிழமை (06) அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை துறைமுகத்துக்குள் கிரிக்கெட் விளையாட இடமளிக்க மாட்டோம் என்று அச்சங்கத்தின் தலைவர் சந்திரசிறி மஹகமகே தெரிவித்தார். 
 
இலங்கை துறைமுக அதிகாரசபையின் விசேட விசாரணைப் பிரிவினால் கடந்த 5ஆம் திகதி மாலை, மேற்படி காரியாலயம் சீல்  வைக்கப்பட்டது. நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றஞ்சாட்டின் பேரிலேயே அக்காரியாலயம் சீல் வைக்கப்பட்டுள்ளது. 
 
எனினும், கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகக்குழு தெரிவு வாக்களிப்பின் போது, அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு ஆதரவாக குறித்த காரியாலயத்தின் பிரதானி வாக்களிக்காமையை அடுத்தே அவரது காரியாலயத்துக்கு சீல் வைக்கப்பட்டதாக அச்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X