2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பிரதமர் நரேந்திர மோடியின் பாக்.விஜயம்  இராஜதந்திர நடவடிக்கை: சுஸ்மா

Kanagaraj   / 2015 டிசெம்பர் 25 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாக்கிஸ்தானுக்கு இன்று விஜயம் செய்து அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியமை இராஜதந்திர நடவடிக்கையாகும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தை முன்னிட்டு அங்கு நான்கடுக்குப் பாதுகாப்புகள் வழங்கப்பட்டிருந்தன. பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துக்கொண்டார்.

பாக். பிரதமரை  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியமை இராஜதந்திர நடவடிக்கையாகும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்திருந்த போதிலும் பிரதமர் நரேந்திர மோடியின் பாகிஸ்தான் விஜயத்தை காங்கிரஸ் கண்டித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X