2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பிரபாகரனின் பாதுகாவலர் பயன்படுத்திய கொப்பு ஒப்படைப்பு

Thipaan   / 2016 மார்ச் 14 , பி.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலரால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விமான ஏவுகணையின் வெற்றுக்கொப்புவை ஒப்படைப்பதற்கு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

24 கோடி ரூபாய் பெறுமதியான ஹெலிகொப்டரைத் தாக்கியழித்த விமான ஏவுகணையின் வெற்றுக்கொப்பே இவ்வாறு ஒப்படைக்கப்படவுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலராக இருந்த அருளானந்தன் நிஸாந்தன் என்பவரே, அந்த ஏவுகணையை பயன்படுத்தியதாக அறியமுடிகின்றது. அவர், திருகோணமலை உயர்நீதிமன்றத்தினால் ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை விமானப்படையின் அருங்காட்சியத்திடமே இது கையளிக்கப்படவுள்ளது. அந்த வெற்றுக்கொப்புவைப் பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் 24ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, இரத்மலானை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரான அருளானந்தன் நிஸாந்தன், வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்பாதுகாவலர்களில் ஒருவர் மட்டுமன்றி, விமான அழிப்பு ஏவுகணைப் பயிற்சியையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X