2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பொறியியல் பேரவை சட்டமூலம்:‘அரசியலமைப்புக்கு முரணானது’

Kogilavani   / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொறியியல் பேரவைச் சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது என, உயர்நீதிமன்றம் அறிவித்திருப்பதாக, சபாநாயகர் கருஜயசூரிய, நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (20) அறிவித்தார்.  

ஜயசூரிய தலைமையில், நேற்று வியாழக்கிழமை காலை 10.30க்கு கூடியது. இதனையடுத்து விடுத்த சபாநாயகர் அறிவிப்பின் போதே, இவ்விடயத்தை தெரிவித்த கரு ஜயசூரிய, தனது அறிவிப்பில் மேலும் கூறியதாவது,  

“நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொறியியல் பேரவை சட்டமூலத்தின் உறுப்புரை 12 (1), உறுப்புரை 12 (2), உறுப்புரை 4 (1), உறுப்புரை 4 (2), உறுப்புரை 4 (3), உறுப்புரை 4 (4), உறுப்புரை 5 (1), உறுப்புரை 8 (2), உறுப்புரை 8 (3), உறுப்புரை 8 (5), உறுப்புரை 20 (3), உறுப்புரை 38 ஆகியவை அரசியலமைப்புக்கு முரணானது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.  

எனவே, இச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதெனில், மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்லது சர்வஜன வாக்கெடுப்புத் தேவை. ஆகையால், இச்சட்ட மூலம் மீளாய்வு செய்யப்படவேண்டும்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .