2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

போலி ஆவணங்களுடன் ஒருவர் கைதானார்

Princiya Dixci   / 2016 ஜனவரி 21 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -மொஹொமட் ஆஸிக் 

போலி பிறப்புச் சான்றிதல் தயாரிப்பில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில், 13 போலியான பிறப்புச் சான்றிதல்களுடன் 40 வயதான ஒருவரை, அலவத்துகொடை பொலிஸார், நேற்று கைதுசெய்துள்ளனர். 

மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த இச்சந்தேக நபரை, அக்குறணை வைத்திய சாலைக்கு அன்மையில் வைத்து அதிகாலை 4.30க்கு கைதுசெய்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவரிடம் நடாத்திய விசாரணையின் போது, அவரிடமிருந்த 13 போலி பிறப்புச் சான்றிதல் பத்திரங்கள், போலி பிறப்புச் சான்றிதல்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தக் கூடிய கடதாசிகள்,  போலியாக தயாரிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதல்கள் அடங்கிய ''பென் ட்ரைவ்' கைப்பற்றப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X