Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 டிசெம்பர் 28 , பி.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் வில்பத்து சரணாலயத்தில் வைத்துச் சுட்டு வீழ்த்தப்பட்ட அன்டனோவ்-32 விமானம் தொடர்பான வழக்கை, ஜனவரி 12ஆம் திகதி முதல் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி ரேமா ஸ்வரணாதிபதியே மேற்கண்ட கட்டளையை நேற்று திங்கட்கிழமை பிறப்பித்தார். சம்பவம் இடம்பெற்று 15 வருடங்களுக்கு பின்னர், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பலாலியிலிருந்து இரத்மலானைக்கு பயணித்துகொண்டிருந்த அன்டனோவ்-32 வில்பத்துவ சரணாலயத்தில் வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் மிஷேல் (எறிகணை) தாக்குதலில் தலாவ வீரவெவ பிரதேத்தில் சுட்டுவீழ்த்தப்பட்டது.
2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி வில்பத்து சரணாலயத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதலினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதனால், ரஷ்யா விமானி மற்றும் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 31 பேர் பலியாகினர். இந்த சம்பவம், தொடர்பான வழக்கை விசேட வழக்காக கவனத்தில் கொண்டு இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளது. சந்தேகநபர்களான யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த இராசதுரை ஜெகன் மற்றும் நல்லாம் சிவலிங்கம் ஆகிய இருவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் எறிகணை படையணியின் உறுப்பினர்கள் இருவரையும் அன்று வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
26 minute ago
35 minute ago
47 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
35 minute ago
47 minute ago
56 minute ago