2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் அதிகாரியை கொலை செய்ய முயன்ற இலங்கையர் கைது

Gavitha   / 2016 ஜனவரி 23 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை கொலை செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், 19 வயதுடைய இலங்கை பிரஜை ஒருவரை இந்தியப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விமான பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகரான தங்கசாமி, தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் தனியார்; வைத்தியசாலையில் ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த பொலிஸ் அதிகாரி ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த போதே, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞன், சென்னையிலுள்ள கே.கே. நகரில் வசிப்பவர் என்றும் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடி அவரை விசாரித்த போது, அவர் பொலிஸை கல்லால் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X