2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ்மா அதிபருக்கெதிராக வழக்கு?

Gavitha   / 2016 ஜனவரி 26 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாநூ கார்த்திகேசு

'எம்பிலிப்பிட்டிய சம்பவத்துடன் தொடர்புபட்ட பொலிஸ் அதிகாரிக்கு எதிராக, கண்கண்ட சாட்சிகள் இருந்தும் சட்டநடவடிக்கை எடுக்காதிருப்பதற்கான காரணம் என்ன? ஒரு கிழமைக்குள் இதற்கான முடிவு கிடைக்காவிட்டால் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்' என வழக்கறிஞர் லக்சான் டயஸ் தெரிவித்தார். மருதானையில் அமைந்துள்ள சமூகம் மற்றும் மதங்களுக்கான நிறுவனத்தில் நேற்று திங்கட்கிழமை(25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'பொலிஸ் என்பது மக்களைப் பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்டதே ஒழிய, மக்களைப் பயமுறுத்துவதற்கென உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. மக்களின் வரிப்பணத்திலே அவர்கள் தமது ஊதியத்தைப் பெற்றுக் கொள்கின்றார்கள். சாதாரண பொதுமகனுக்கு எதிராக பொலிஸ் அதிகாரியே குற்றமிழைத்திருந்தாலும் அவருக்கு எதிராகச் சட்டநடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக இவ்வளவு சாட்சிகள் இருந்தும், சட்டநடவடிக்கை

எடுக்காதிருப்பதற்கான காரணம் என்ன? ஒரு கிழமைக்குள் இதற்கான முடிவு கிடைக்க வேண்டும். கிடைக்காத பட்சத்தில் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்' என வழக்கறிஞர் லக்சான் டயஸ் தெரிவித்தார்.

ஊடகவியலாளர், சட்டத்தரணிகள், அரசியல் செயற்பாட்டின் ஒருங்கிணைந்த சங்கத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான உத்துல் பிரேமரத்ன கருத்து தெரிவிக்கையில்,

'இச்சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளாக 30 பொதுமக்களும் 25 பொலிஸாரும் உள்ளனர். அதுமட்டுமன்றி, 4 சிசிடிவி கமெரா சாட்சியங்களும் கிடைத்துள்ளன. இருந்தும், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமல் இடமாற்றஞ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை காலமும் பணியில் தவறிழைத்தவர்களே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குற்றமிழைத்தவர்கள் அல்ல' எனக் கூறினார்.


  Comments - 0

  • Aloseas Tuesday, 26 January 2016 06:25 AM

    தற்போதுள்ள பொலிஸ் மா அதிபரை மாற்றி ஆளுமை உள்ள சிரேஸ்ட அதிகாாி ஒருவரை பொலிஸ் மா அதிபராக மாற்ற வேண்டும்.

    Reply : 0       0

    Aloseas Tuesday, 26 January 2016 06:27 AM

    தற்போதுள்ள பொலிஸ் மா அதிபரை மாற்றி ஆளுமை உள்ள சிரேஸ்ட அதிகாாி ஒருவரை பொலிஸ் மா அதிபராக மாற்ற வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X