Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜனவரி 19 , பி.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்பிலிபிட்டியவில் சுமித் பிரசன்ன என்ற இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நடக்கும் விசாரணைகளில் முன்னேற்றம் தொடர்பாக, தனது அதிருப்தியை வெளியிட்ட சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, பொலிஸாரின் நடவடிக்கைகளை அவதானிக்க ஒரு விசேட நிறுவனம் உருவாக்கப்பட வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை (19) ஆலோசனை வழங்கினார்.
பொலிஸாரின் தற்போதைய நடவடிக்கை திருப்தியில்லாது இருப்பதால், பொலிஸ் நடவடிக்கைகளை கண்காணிக்க சிவிலியன்களைக் கொண்ட ஓர் அமைப்பு அமைக்கப்பட வேண்டும் என்று, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஆலோசனை முன்வைக்கவுள்ளதாக அவர் கூறினார்.
பொலிஸின் மனதில் புதிய மனப்பாங்குகள் உருவாக்கப்படவேண்டும். எம்பிலிபிட்டிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடந்த விதம் தொடர்பில் அரசாங்கம் கூட அதிருப்தியில் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
119 அழைப்பை பொலிஸ் எவ்வாறு பெற்றது, அதில் அழைத்தவர் யார் என்பன ஆராயப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .