2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

‘பேக்கோ சமன்’னின் மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2025 செப்டெம்பர் 18 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ‘பேக்கோ சமன்’ என்பவரின் மனைவி ஷாதிகா லக்ஷனியின் விளக்கமறியல் செப்டம்பர் 25 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அவர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் வியாழக்கிழமை (18) ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே மேற்கண்டவாறு விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தர பத்மே', 'கொமாண்டோ சலிந்த' , 'பாணந்துறை நிலங்க' மற்றும் “பேக்கோ சமனின்” மனைவி உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பலில் இருந்த “பேக்கோ சமன்” என்பவரின் மனைவி ஆகஸ்ட் 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X