Editorial / 2025 செப்டெம்பர் 04 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் பயிலும் மாணவிகள் குழுவை பகிடிவதை வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 7 மாணவிகள் மற்றும் 9 ஆண் மாணவர்களை குற்றப் புலனாய்வுத் துறை (CID) கைது செய்துள்ளது.
அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் 24 முதல் 26 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பயிலும் மாணவிகள் குழுவை சந்தேக நபர்கள் பகிடிவதை வன்கொடுமை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் புதன்கிழமை (03) கைது செய்யப்பட்டனர்.
இதில் 9 மாணவன்கள், 7 மாணவிகள் உட்பட 16 பேரையும் ஏறாவூர் நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது தலா ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவித்து எதிர்வரும் 26 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .