Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2025 ஜூலை 09 , பி.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளை தடுக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழிகாட்டுதல்கள் சிலவற்றை முன்வைத்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் பகிடிவதையைத் தடுக்கத் தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (09) பிறப்பித்த உத்தரவின்படி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த முன்மொழிவுகளை செய்துள்ளது.
அதன்படி, பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு அளிக்க 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகம் மற்றும் விடுதி வளாகங்களுக்குள் உள்ள பொது இடங்களைக் கண்காணிக்க நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் வழிகள், உணவக விடுதிகள், விளையாட்டு அரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் தாழ்வாரங்களில் சிசிடிவி கெமராக்களை நிறுவவும் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்த தேவையான நிதி, தொழில்நுட்ப ஆதரவு மற்றும் வசதிகளை வழங்குமாறு கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சருக்கு அமர்வு உத்தரவிட்டுள்ளது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
37 minute ago
3 hours ago
7 hours ago