Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷ் அரசாங்கத்தால் சிறை வைக்கப்பட்டிருக்கும் பிரபல புகைப்படப்பிடிப்பாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஷஹிடுல் அலாமை விடுதலை செய்யக்கோரி, ஆர்ப்பாட்டமொன்று, இன்று (02) முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பிலுள்ள பங்களாதேஷ் தூதரகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
பங்களாதேஷ் அரசாங்கமானது, மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களைக் கைதுசெய்வதை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
பங்களாதேஷைச் சேர்ந்த ஷஹிடுல் அலாம், இவ்வாண்டு ஓகஸ்ட் 5ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார்.
போராட்டங்கள் தொடர்பாக, அல் ஜஸீரா தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கியதைத் தொடர்ந்தே, 63 வயதான அலாம் கைதுசெய்யப்பட்டிருந்தார். "பொய்யான தகவல்களையும் ஆத்திரமூட்டும் கருத்துகளையும் வெளியிட்டமைக்காக, அவரை விசாரணை செய்துவருகிறோம்" என, பொலிஸார் தெரிவித்திருந்தார்.
ஆனால், அக்குற்றச்சாட்டை மறுக்கும் அலாம், தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, தான் தாக்கப்பட்டதாக, நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போது, ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
(படப்பிடிப்பு: தமித் விக்ரமசிங்க)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago