2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பசிலின் மனு ஒத்திவைப்பு

Gavitha   / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னைக் கைது செய்வதனைத் தடுக்குமாறு கோரி, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையை, எதிர்வரும் 28ஆம் திகதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதேவேளை, மனுதாரருக்கு எதிராக கடுவெல, மாஹர, கம்பஹா மற்றும் பூகொடை ஆகிய நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் முறைப்பாடுகளை, இந்த மனுவில் இணைப்பதற்கும் உயர்நீதிமன்றம் அனுமதியளித்தது.

பசில் ராஜபக்ஷவின் அடிப்படை உரிமைமீறல் மனு, பிரதம நீதியரசர் கே. என். ஸ்ரீ பவன், நீதியரசர்களான அனில் குணரத்ன மற்றும் கே.பி சித்ரசிறி ஆகியயோர் தலைமையிலான குழுவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டபோதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தன்னைக் கைது செய்வதற்கான ஆபத்து இருப்பதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக, ஏனைய வழக்குகளுக்கு இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரியும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை கடந்த 17ஆம்திகதி புதன்கிழமையன்று தாக்கல் செய்திருந்தார்.

சட்டத்தரணி சனத் விஜயவர்தனவின் ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த அடிப்படை உரிமைமீறல் மனுவில்,
திவிநெகும திணைக்களத்தில் நிதி முறைகேடுகள், பணச்சலவை உள்ளிட்ட பல்வேறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தன்னைப் பிரதிவாதிகளாக்கி பல்வேறு வழக்குகள், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

கம்பஹா, கடுவெல மற்றும் பூகொட உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள், விசாரணைக்கு உட்படுத்தப்படுவது தன்னுடைய தனிப்பட்ட சுதந்திரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்படுகின்றது.

மனுவின் பிரதிவாதிகளாக, பொலிஸ்மா அதிபர், நிதிக்குற்ற பொலிஸ் விசாரணைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

உண்மையை மறைத்து, தவறான தகவல்களின் அடிப்படையிலான குற்றச்சாட்டுகளின் கீழ், தன்னை மீண்டும் கைதுசெய்வதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால், மேற்குறிப்பிட்ட நீதிமன்றங்களில் முன்னெடுக்கப்படும் வழக்குகளை, விசாரணைகளுக்கு உட்படுத்துவதிலிருந்து நிறுத்துமாறு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் வழக்கை விசாரணைக்கு உட்படுத்துவதனால் தன்னுடைய அடிப்படை உரிமை மீறப்படுவதாக கட்டளையிடுமாறும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தமை தெரிந்ததே.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X